Dec 21, 2011

விண்டோஸ் பழுதுபார்ப்பு!


விண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளம் உபயோகிப்பவர்கள் அவ்வப்போது, தங்களது கணினி பூட் ஆகும் பொழுது, விண்டோஸ் லோடு ஆகும் திரை வந்த பிறகு, உடனடியாக ரீஸ்டார்ட்  ஆகும் பிரச்சனையை சந்தித்து இருக்கலாம். 


இப்படி முதல் முறை ரீஸ்டார்ட்  ஆகி மறுபடி பூட் ஆகும் பொழுது Safe mode ஆப்ஷனோடு திரை வந்திருக்கும். 
இதில் Safe mode இல் சென்றாலும், Last known Good Configuration -இல் சென்றாலும், இதே போன்று தொடர்ந்து ரீஸ்டார்ட் ஆகிக் கொண்டிருக்கும், உள்ளே இருக்கும் உங்களது முக்கியமான டேட்டாக்கள் ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயம் வருவது இயற்கை. 

சரி, விண்டோஸ் சீடியை வைத்து பூட் செய்து இந்த இயங்குதளத்தின் மேலேயே over write செய்து விடலாம் என்று முயலும் போது, அங்கேயும் ஆப்பு காத்திருக்கும்.  விண்டோஸ் சீடியில் பூட் செய்து முதலாவது Repair ஆப்ஷனை தவிர்த்து  Agreement பக்கத்திற்கு அடுத்து வரும் திரையில் கீழே உள்ளது போல உங்கள் விண்டோஸ் பார்ட்டிஷன் காண்பிக்கப்பட்டால் 'R' கீயை அழுத்தி ரிப்பேர் செய்து கொள்ளலாம். 


 ஆனால், விண்டோஸ் ரிப்பேர் வசதியில் செல்லும் போது உங்கள் விண்டோஸ் பார்ட்டிஷனை Unknown partition என்றோ அல்லது விண்டோஸ் ஏற்கனவே நிறுவப்படாத மற்ற பார்ட்டிஷன்களை போலவே உங்கள் விண்டோஸ் பார்ட்டிஷனும் பட்டியலிடப்பட்டிருக்கும். இது போன்ற நிலை வரும்பொழுது சற்று சிக்கல்தான். 

முதலாவதாக நாம் நினைவில் கொள்ள வேண்டியது. இந்த நிலைக்கு முந்தைய வரலாறு (வரலாறு மிக முக்கியம் அமைச்சரே!..) அதாவது இந்த ரீஸ்டார்ட் பிரச்சனை வருவதற்கு முன்பாக என்ன நிகழ்ந்தது? முழுவதுமாக ஷட் டவுன் ஆவதற்கு முன்பாக பவரை அனைத்து விட்டீர்களா? அல்லது கரண்டு போய்விட்டதா? யாராவது Reset பட்டனை அழுத்திவிட்டு போய் விட்டார்களா? அல்லது இதில் ஏதுமில்லையா? 

இந்த கேள்வியெல்லாம் எதற்கு? என்றால், இது போன்ற ரீ ஸ்டார்ட் பிரச்சனை பெரும்பாலும் பூட் பார்ட்டிஷனில் கோப்புகள் கிராஸ் லிங்க் ஆகிவிடவதால் ஏற்படுபவை, அல்லது (மிக அரிதாக) உங்கள் வன்தட்டிற்கு வயதாகி கொண்டிருக்கிறது அல்லது (மிகமிக அரிதாக) பிராசசர் ஃபேனில் தூசி அதிகம் படிந்து, ஃ பேனின் வேகம் குறைந்தது  என்றும் கொள்ளலாம். கிராஸ் லிங்க் ஆவதற்கு முக்கிய காரணம் முறையாக ஷட் டவுன் செய்யாமலிருப்பது.

இந்த பிரச்சனை வரும் பொழுது எடுத்தவுடனே விண்டோஸ் Over write செய்து விடலாம் அல்லது புதிதாக வேறு ட்ரைவில் நிறுவிவிடலாம் என்ற முடிவிற்கு வருவதற்கு முன்பாக, விண்டோசின் தாத்தா DOS கருவியான Chkdsk ஐ பயன்படுத்தி இந்த பிரச்னைக்கு விரைவாகவும், எளிதாகவும் தீர்வு காண்பது எப்படி என்று பார்க்கலாம். 

விண்டோஸ் பூட் சீடியை வைத்து உங்கள் கணினியை பூட் செய்து கொள்ளுங்கள். பிறகு முதலாவதாக வரும் Repair திரையில் 'R' கீயை அழுத்தி Recovery Console திரைக்கு வந்து விடுங்கள். 

     
இந்த பிரச்சனை உள்ள கணினிகளில், விண்டோஸ் பார்ட்டிஷன் உள்ள ட்ரைவை குறிப்பிடும்படி கேட்காது. தேர்வு செய்ய சொல்லி வந்தால் தேர்வு செய்து கொள்ளுங்கள். அடுத்து, C:\> ப்ரோம்ப்டில் CHKDSK /R கட்டளை கொடுக்கலாம். ஒரு சில சமயங்களில் இந்த கட்டளை இயங்காமல் போனால், CD/DVD   ட்ரைவிற்கு   சென்று (உதாரணமாக g:) அங்கு CD\i386 கட்டளை கொடுத்து அந்த டைரக்டரிக்கு சென்று அங்கு CHKDSK கட்டளையை கொடுங்கள். 


இது முடிந்த உடன் Exit கொடுத்து கணினியை ரீ ஸ்டார்ட் செய்து விட்டால் போதுமானது. கிராஸ் லிங்க ஆன சிஸ்டம் கோப்புகள் அனைத்தும் சரி செய்யப்பட்டு, கணினி முன்பு போல இயங்கும்.  பெரும்பாலான கணினிகளில் இந்த வழியை பயன்படுத்தி விண்டோஸ் எக்ஸ்பி ரீ ஸ்டார்ட் பிரச்சனையை சரி செய்யப் பட்டுள்ளது.

நன்றி:சூர்யா கண்ணன்

பென்ட்ரைவ் ட்ரிக்ஸ்: ஃபோல்டர் ஷார்ட்கட் பாதிப்பிற்கான தீர்வு


பென்ட்ரைவ் ட்ரிக்ஸ்: ஃபோல்டர் ஷார்ட்கட் பாதிப்பிற்கான தீர்வு
பென் ட்ரைவ் மற்றும் எக்ஸ்டெர்னல் ஹார்டிஸ்க் ஆகியவற்றை நாம் தினசரி அலுவல் நிமித்தமாகவும், தனிப்பட்ட பயன்பாட்டிற்காகவும் பல கணினிகள் மற்றும் மடிக்கணினிகளில் பயன் படுத்தி வருகிறோம். இவ்வாறான பயன்பாட்டில் நம்மை அறியாமலேயே சில சமயங்களில் வைரஸ் அல்லது மால்வேர் தாக்குதலுக்கு உள்ளான கணினிகளில் பயன்படுத்தும் நிலை உண்டாகி விடுவது இயல்புதான்


பெரும்பாலும் நமது அதி முக்கியமான கோப்புகள் (புகைப்படங்கள், பல நாட்கள் செலவழித்து உருவாக்கிய ஆவணங்கள்அனைத்தையும் பென் ட்ரைவ்களில்தான் வைத்திருப்போம். மால்வேர் தாக்குதல்களுக்கு உள்ளான கணினிகளில் இவற்றை பயன் படுத்திய பிறகு, நமது பென் ட்ரைவை சோதித்துப் பார்த்தால், நாம் அதில் வைத்திருந்த ஃபோல்டர்கள் அனைத்தும் காணாமல்  போய், வெறும் 1 KB மட்டுமே அளவுள்ள  அவற்றின் ஷார்ட்கட்கள் மட்டுமே இருப்பதைக் கண்டு பலரும் அதிர்ச்சி அடைந்திருக்கலாம்



ஒரு சிலர், பென் ட்ரைவில் உள்ள அனைத்தும் போய்விட்டது என்று எண்ணி ஃபார்மெட் கூட செய்திருக்கிறார்கள். பல நாள் உழைப்பு வீணாகிவிட்டதே என்றெண்ணி தலையில் கைவைத்து அமருவதை விட, கொஞ்சம் சிந்தித்தால் போதும் இழந்ததாக கருதிய கோப்புறைகளை மீட்டெடுத்து விடலாம்

முதலில் நாம் செய்ய வேண்டியது, நமது பென் ட்ரைவ் அல்லது எக்ஸ்டர்னல்  ட்ரைவ் லெட்டரை அறிந்து கொண்டு (உதாரணமாக G: ), ஸ்டார்ட் மெனுவில் ரன் கட்டளைக்கு சென்று CMD என டைப் செய்து DOS prompt இற்கு செல்லுங்கள். அங்கு ட்ரைவ் லெட்டரை டைப் செய்து (G:) என்டர் கீயை அழுத்திஅந்த குறிப்பிட்ட ட்ரைவிற்கு செல்லுங்கள். அங்கு DIR/AD என டைப் செய்து என்டர் கீயை அழுத்த, நமது ட்ரைவில் உள்ள அனைத்து ஃபோல்டர்களும் (நாம் இழந்ததாக கருதிய) hidden வடிவில் மறைக்கப்பட்டிருப்பதை காணலாம்

இவற்றை எப்படி மீட்டெடுக்கலாம்

இதே DOS prompt -ல் இருந்து கொண்டு, Attrib -r -s -h /s /d G:*.* என்ற கட்டளையை கொடுங்கள். அவ்வளவுதான் உங்கள் கோப்புறைகள் மீட்கப்பட்டனபிறகு தேவையற்ற ஷார்ட்கட்கள், மற்றும் வைரஸ் என சந்தேகிக்கப்படும் கோப்புகள் அனைத்தையும் டெலிட் செய்து விடுங்கள்


டாஸ் கட்டளைகளை பயன்படுத்த தயங்குபவர்கள் கீழே உள்ள சுட்டியிலிருந்து பேட்ச் பைலை தரவிறக்கி பயன்படுத்திக் கொள்ளலாம்


.